உள்ளூர் செய்திகள்

பாத ஹஸ்தாசனா

பொருள்: பாதங்களை ஹஸ்தம் (கைகள்) தொடுவதால், இந்த பெயர் பெற்றது.செய்முறை:1. விரிப்பில் நேராக நின்று, இரு கைகளையும், மார்பு முன் கூப்பி, மூச்சை உள் இழுத்துக் கொள்ள வேண்டும்2. கைகளை மேலே உயர்த்தி, பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, கால் பாதங்களுக்கு பக்கத்தில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்க வேண்டும். இந்த நிலையில், முட்டிப் பகுதியானது வளையக் கூடாது3. சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், கைகளை, மூச்சை இழுத்துக் கொண்டே தலைக்கு மேலே உயர்த்தி, பின் சாதாரண நிலைக்கு வர வேண்டும்.பலன்கள்:1. தொடை சதை குறையும்2. நரம்புச்சுருள் பிரச்னைக்கு இந்த ஆசனம், நல்ல தீர்வு3. வயிற்றுப் பகுதியின் உள் உறுப்புகள் எல்லாம், நல்ல முறையில் இயங்கும்4. உடல் எடை குறையும்5. மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்6. இனப்பெருக்க உறுப்புகளின் இயக்கம், நன்கு துாண்டப்படும்.குறிப்பு:முதுகு வலி உள்ளோர், யோகாசன ஆசிரியர்களின் ஆலோசனையோடு, இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். - ரா.சுதாகர்,திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை.97909 11053


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !