பத்ராசனம்
செய்முறை:1 தரையில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.2 இரண்டு கால்களையும் பக்கவாட்டில் மடக்க வேண்டும். உள்ளங்கால் பாதங்கள், இரண்டும் ஒன்றுடன், ஒன்று சேர்ந்தவாறு கால்களை மடக்கி வைக்க வேண்டும்.3 இரண்டு கால்களையும் (கைகளை கும்பிடுவது) போல் பரப்பி வைக்க வேண்டும்.4 இரண்டு கைவிரல்களை கோர்த்தவாறு கூப்பி வைத்த கால்விரல்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.5 முதுகை நிமிர்த்தி நேராக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.6 இரண்டு கால் தொடைகளையும் மேலும், கீழும் வண்ணத்துப்பூச்சி சிறகை ஆட்டி பறப்பது போல் ஆட்டிக் கொண்டே தரையை தொட முயற்சிக்கவும்.கால அளவு: வண்ணத்துப்பூச்சி சிறகை விரித்து பறப்பது போன்று, இரண்டு தொடைகளையும் மெதுவாக மேலும், கீழும் அசைத்து, 20 முறைகள் செய்ய வேண்டும். பின் கால்களை நேராக நீட்டி ஓய்வு எடுக்க வேண்டும். இந்த மாதிரி 3 முறைகள் செய்ய வேண்டும்.மூச்சு: கால்களை மேலும், கீழும் அசைக்கும் போது, சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். 20 முறை ஆட்டிய பின் இரண்டு கால்களையும் நேராக நீட்டி 2 முறை ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும்.பலன்கள்: சிறுநீர்ப்பை பலம் பெற உதவும்.ஆண்களுக்கான பிராஸ்டேட் உறுப்பு சார்ந்த பிரச்னைகளுக்கு பலன் தரும் ஆசனம்.கருவுற்ற பெண்கள், இந்த ஆசனத்தை செய்தால், சுகப் பிரசவம் நடைபெற உதவியாக இருக்கும்.குறிப்பு: கால் முட்டி பிரச்னை உள்ளவர்கள், கால்களை மடக்கி பக்கத்தில் வைப்பதை தவிர்த்து, ஒரு அடி முன்னால் தள்ளி வைத்து செய்யலாம். ஆரம்ப நிலையில், இரண்டு தொடைகளும் தரையில் தொடர்ந்து பயிற்சி செய்ய, சில நாட்களோ அல்லது மாதங்களோ ஆகும்.- டாக்டர் வீ.கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன், சென்னை. 93810 32012