கேள்வி-பதில்:
மருந்து டாக்டர்களின் ஆலோசனையின்றி மருந்துகள்உட்கொள்வது நல்லதில்லை என கூறப்படுகிறதே? -செல்வா,சென்னை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, டாக்டர் களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் கொடுக்கின்றனர். டாக்டர்களே குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுக்கும் போது, மிகுந்த கவனத்துடன் வழங்குகின்றனர். அவரவரின் வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்ப, மருந்துகளின் வீரியத் தன்மை மாறுபடும். மருந்தகங்களில் மருந்தாளுனர்கள் மருந்துகள் வழங்கும் போது, எந்த காரணத்தால், நோய்கள் ஏற்படுகிறது என்பது தெரியாது. அதனால், ஆலோசனையில்லாமல் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால், பெற்றோர்களை விட, குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் மிகவும் அதிகம்.
டாக்டர் கண்ணன், அரசு மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர். பொள்ளாச்சி.