உள்ளூர் செய்திகள்

மூலநோய் தீர்க்கும் முள்ளங்கி ஜூஸ்

இயற்கை முறையில், விளைநிலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகள், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதில், பூமிக்கு அடியில் வளர்பவை மற்றும் சூரிய வெளிச்சத்தில் வளர்பவை. பூமிக்கு அடியில் காய்க்கும் முள்ளங்கி, பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களே, உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆகையால், சத்துள்ள உணவை உட்கொள்வதற்கான முயற்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். பரபரப்பான பொருளாதார தேடல் மிகுந்த வாழ்வில், பாஸ்ட்புட் உணவை தவிர்த்து காய்கள், பழங்கள் என உட்கொள்ள ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். இத்தகைய உணவில், முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. முள்ளங்கியை சாம்பார், பொரியல், கத்தரி வறுவல் உள்ளிட்ட பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம். முள்ளங்கி சாறில், நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும்; மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்