உள்ளூர் செய்திகள்

அரிசி ஊறிய தண்ணீர் அமிர்தம்!

பருக்கள், இளநரை, முடி உதிர்வது, வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பது, தொண்டை வறட்சி, தோலில் அரிப்பு, நெஞ்செரிச்சல், வாய் புண் இது போன்ற பொதுவான பிரச்னைகளுக்கு காரணம், உடல் உஷ்ணம். எத்தனை தான் லோஷன்கள், கிரீம்களை தேய்த்தாலும், உடல் உஷ்ணத்தை குறைக்காவிட்டால் பிரச்னைகள் தீராது.உஷ்ணத்தை குறைக்க...* ஹைட்ரோ தெரபி - ஐஸ் துண்டுகள், சில துளிகள் ரோஜா இதழ் நீர் சேர்த்த நீரில், 10 நிமிடங்கள் பாதங்களை வைத்து, மசாஜ் செய்ய வேண்டும். உடல் வெப்பம் குறைந்து, நரம்புகள் துாண்டப்பட்டு, பதற்றம் குறையும்.* அரிசி தண்ணீர் - வயிற்றில் உள்ள எரிச்சல் நீங்க, 10 கிராம் அரிசியை, 60 மில்லி தண்ணீரில், இரண்டு - ஆறு மணி நேரம் மண் பாத்திரத்தில் ஊற வைக்கவும். வடிகட்டி, சாப்பிடுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம்.* சித்தளி பிராணயாமம் - மெல்லிய பருத்தி துணியை விரித்து, சம்மணம் போட்டு, வசதியாக தரையில் அமர்ந்து கொள்ளவும். நாக்கை வெளியில் நீட்டி மடித்து, மூச்சை ஆழமாக இழுத்து, வாயை மூடி, மூக்கின் வழியே வெளியில் விடவும். இது போல 8 - 10 முறை செய்தால், உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் உடனடியாக சரியாகும்.- ஆயுர்வேத மருத்துவ இதழ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !