உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் போன் அபாயங்கள்

தொலைபேசி, பேஜர், அலைபேசி வரிசையில், முக்கிய இடத்தை பிடித்துள்ளது ஸ்மார்ட் போன். இரவு படுக்கும் போதும் குட்நைட் சொல்லி, காலையில் எழுந்து குட்மார்னிங் சொல்வது ஸ்மார்ட் போன் முகத்தில் தான். அந்தளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி மாணவர்களிடம், ஏன், குழந்தைகள் கையில் கூட, ஸ்மார்ட் போன் இருக்கிறதென்றால், நவீன தொழில்நுட்பத்தை மெச்சித்தான் ஆக வேண்டும். ஆனால், இதற்குள் பல்வேறு அபாயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை, ஒவ்வொருவரும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.சட்டை பாக்கெட்களில், ஸ்மார்ட் போன்களை வைக்க வேண்டாம் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருதயத்துக்கு அருகில் வைக்கும் போது, இருதய பாதிப்பு உண்டாகும் என, ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன அழுத்தம்: ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, மூளையின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும். இதனால், மனநிலை மாற்றங்கள் உண்டாகலாம். ஆய்வு ஒன்றில், ஸ்மார்ட் போன்களை அருகிலேயே வைத்து உறங்கும் நபர்களுக்கு மன அழுத்தம் அதிகம் உண்டாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதிகமாக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், உறக்கத்திலும் பாதிப்பு வரும். சரியாக தூக்கம் இருக்காது. இதனால், இரவு நேரத்திலாவது ஸ்மார்ட் போன்களை, தலையணைக்கு அருகில் வைத்து உறங்க வேண்டாம். பல இடங்களில், அலைபேசியின் பேட்டரி வெடித்து விட்டது என்ற செய்தி, தினமும் வந்து கொண்டு இருக்கிறது.இதிலிருந்து தப்பிக்க, கைக்கு எட்டாத தொலைவில், ஸ்மார்ட் போன்களை வைத்து விடுங்கள். நமது மூளையில், மின்சார ஓட்டம் உள்ளது. அலைபேசியில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது. தொடர்ந்து, 20 நிமிடம் அலைபேசியில் பேசினால், நமது உடம்பின் வெப்பநிலை, ஒரு டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது.குழந்தையை பாதிக்கும்: குழந்தையிடம், அலைபேசியை கொடுத்து பேசச் சொல்வது, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு, மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருப்பதால், அலைபேசியின் கதிர்வீச்சு நேரடியாக மூளையைப் பாதிக்கும். இதை தவிர்க்க, அலைபேசியை, வைப்பரேட் நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். வலது பக்க காதில் வைத்துப் பேசாமல், இடது பக்கக் காதில் வைத்துப் பேச வேண்டும். வலது பக்கத்தில் தான், மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.அலைபேசியில் அதிகமாக, விளையாட்டுகளை விளையாடாமல் இருப்பது நல்லது. காரணம், நம் கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும். காதில் வைத்துப் பேசுவது, ஹெட்போனில் பேசுவது போன்றவைகளை விட, அலைபேசியின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.அலைபேசியில் சார்ஜ் தீரும் கடைசி நேரத்தில் பேசுவது மிக ஆபத்தானது. சார்ஜ் தீரும் போது, அலைபேசியிலிருந்து அதிகமான கதிர்வீச்சு வெளிவிடுவதால், நம் மூளையை அக்கதிர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். அலைபேசியை கையில் பிடிக்காமல், தோளில் வைத்து கழுத்தை சாய்ந்து பேசுவதாக இருந்தால், உடனடியாக தவிர்த்து விடுவது நல்லது. இச்செயல் தொடர்ந்தால், நாளடைவில் கழுத்து வலி ஏற்பட்டு தீராத உபாதையை கொடுக்கும். முக்கியமான விஷயங்களாக இருந்தால், அலைபேசியில் பேசலாம்; வரும் அழைப்புகளுக்கு, செவி கொடுத்தால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !