உள்ளூர் செய்திகள்

தோல்காக்கும் இஞ்சி!

* தேநீர் மற்றும் சில உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இஞ்சியில், 40 விதமான, 'ஆன்டி ஆக்சிடென்ட்'கள் உள்ளன. * இஞ்சியில் உள்ள இந்த ஆன்டி ஆக்சிடென்ட், வயோதிகத்தை தாமதப்படுத்தி தோலுக்கு புத்துணர்வு தருகிறது.* உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுவதோடு, சீரான ரத்த ஓட்டத்திற்கு இஞ்சி உதவுகிறது.* தோலின் வெளிப்புறத்தில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் கொப்புளங்கள், வெடிப்புகள், பருக்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சிக்கு உண்டு.* வெட்டுக்காயத் தழும்புகளில் இஞ்சி விழுதை தொடர்ந்து தடவினால் தழும்புகள் மாறும்.*அரைத்த இஞ்சி விழுதுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை தொடர்ந்து தோலில் தடவி வந்தால், நாளடைவில் தோல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருப்பதை காணலாம்.டாக்டர் ரேச்சல், ஆயுர்வேத சிறப்பு மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !