உருளைக்கு பிரிஜ் எதிரி!
விநாயகம், கோவில்பட்டி: உருளைக்கிழங்கை 'பிரிஜ்'ஜில் வைக்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?உருளைக்கிழங்கை பிரிஜ்ஜில் வைக்கும்போது, அதில் இருக்கும் குளூக்கோஸ், அக்ரிலமைடு என்ற ரசாயனத்தை, அளவுக்கு அதிகமாக சுரக்கச் செய்கிறது. அதிக உஷ்ணத்தில் உருளையைச் சமைக்கும்போது, இதே ரசாயனம் உற்பத்தியாகும். எனவே, ஏற்கனவே உற்பத்தியான ரசாயனத்தோடு, கூடுதலாக ரசாயனம் உற்பத்தியாகி, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது.