ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்!
நம் நாடு உட்பட ஆசிய நாடுகளில், மரபணுக்களில், இடுப்பைச் சுற்றி, 'வெயிட்' போடக் கூடிய தன்மை அதிகம். மொத்த உடலும் எடை கூடுவதை விட, வயிறு, இடுப்பைச் சுற்றி எடை போடுபவர்களுக்கே சர்க்கரை கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இன்று 80, 90 வயது முதியவர்கள், இடுப்பைச் சுற்றி சதையே இல்லாமல் இருக்கின்றனர். அவர்களின் உணவும், உடல் உழைப்பும் வேறு. மிகக் குறைந்த அளவு இயற்கையான தானியங்கள், காய்கறிகள் சாப்பிட்டு, உடல் உழைப்பை அதிகம் செய்தனர்.எவ்வளவு துாரம் ஆனாலும் நடந்தே போவர்; வீட்டில் எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர். விசேஷ நாட்களில் மட்டுமே அரிசி சாதம் சாப்பிட்டனர். ஜப்பானில் குறிப்பிட்ட தீவில் வசிப்பவர்களின் நீண்ட வாழ்நாள் ரகசியம் இது தான். வாழ்வின் கடைசி நாள் வரை, நிதானமாக உழைக்க வேண்டும். இயற்கையுடன் ஒன்றி, நம் மீது அன்பானவர்கள் நடுவில், மன அழுத்தம் இல்லாமல் புன்னகையுடன் அமைதியாக வாழ வேண்டும்.- நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ற ஜப்பானியர்களின் வாழ்க்கை குறிப்பான, 'இக்கிகாய்'யிலிருந்து