உள்ளூர் செய்திகள்

அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!

கொரோனா இரண்டாவது அலையில், வளர்ந்த குழந்தைகள் மட்டுமல்லாது, குறை பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்க்கு, கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. மன அழுத்தம் வைரஸ் தொற்று காலத்தில், இயல்பாக பரிசோதனைக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழலில், கர்ப்பிணிக்கு மன அழுத்தம் அதிகமாகி, குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தை பிறந்த பின், தாய் அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்களிடம் இருந்தும் குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம். தாயின் வயிற்றில் இருக்கும் போது, தொப்புள் கொடி, ரத்தம், பனிக்குட நீர் வாயிலாக, குழந்தைக்கு தொற்று பரவுவது மிகவும் அபூர்வம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதை தவிர்க்க முடியும். பச்சிளம் குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதால், அம்மா, அப்பா தவிர வேறு யாரும் குழந்தையின் அருகில் செல்ல வேண்டாம், அவர்களும் முக கவசம் அணிந்து தான் இருக்க வேண்டும்.கர்ப்ப காலத்தில், எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.குழந்தை பெற்ற சில நாட்களில் கொரோனா பாசிட்டிவ் என்று சிலருக்கு வருகிறது. இவர்களுக்கு, பிரசவத்தின் போது தொற்று ஏற்பட்டதா, அறிகுறிகள் இல்லாமல் இருந்து, குழந்தை பெற்ற பின் தெரிந்ததா என்பதும் புரியவில்லை. கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் அதிகமாக காரணம், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே, பாதித்தவரிடம் இருந்து மற்றவருக்கு வைரஸ் பரவுகிறது.தாய்ப்பால்தாய்ப்பால் மூலம் வைரஸ் பரவும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே, தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக் கூடாது. முக கவசம் அணிவதையும் தவிர்க்க வேண்டாம்.வளர்ந்த குழந்தை என்றால் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே டாக்டரிடம் அழைத்து வருவர். குறை பிரசவ குழந்தையைப் பொறுத்தவரை, நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்காது. மூச்சு திணறல், செரிமான பிரச்னை, தொற்று, இதய கோளாறு இருப்பதும் இயல்பு. இதில் சில கொரோனா அறிகுறிகளாகவும் இருக்கலாம். முதல் அலை போன்று காய்ச்சல், உடல் வலி என்று மட்டும் அறிகுறிகள் இல்லாமல், குழந்தைகளுக்கு தோலில் தடிப்பு, செரிமான கோளாறு, கண்களில் தொற்று வருகிறது.குறை பிரசவ கோளாறுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாவிட்டால், கொரோனா பரிசோதனை அவசியம். டாக்டர் தீபா ஹரிஹரன் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர், சென்னை.98410 71435


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்