உள்ளூர் செய்திகள்

டெங்கு காய்ச்சல் என்றவுடன் அச்சப்பட தேவையில்லை

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிப்பின் தீவிரம், அடுத்த ஒரு மாதத்திற்கு நீடிக்கலாம்.மழை பெய்து நின்றவுடன், கொசுவின் மூலம் பரவும், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, ப்ளூ காய்ச்சல் போன்ற வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.அறிகுறிடெங்கு காய்ச்சல் பாதிப்பு, கடந்த சில மாதங்களாக தொடர்கிறது. டெங்கு காய்ச்சல் என்றவுடன், ஒரு அச்ச உணர்வு, அனைவருக்கு வருகிறது; இது தேவையில்லை.டெங்கு வந்தவர்களில், 75 சதவீதம் பேருக்கு, அது வந்த சுவடே தெரியாமல், தானாகவே மறைந்துவிடும். காய்ச்சல், தலைவலி, கண் வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் பாதித்த, 25 சதவீதம் பேரில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே, டெங்கு அறிகுறிகள் தீவிரமாகலாம்.இவர்களில் சிலருக்கு, தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. வெகு சிலருக்கே, ஆபத்தான நிலை வருகிறது. தட்டணுக்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் கீழ் குறையும் போது மட்டுமே, ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும்.செய்ய வேண்டியவைடெங்கு பாதிப்பு இருந்தால், திரவ உணவுகளை அதிகமாக எடுக்க வேண்டும். வழக்கமாக இருக்கும் அறிகுறிகளை விடவும், தீவிர காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, உடல் வலி, ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.ஈறுகளில் ரத்தம், சிறுநீர், மலத்தில் ரத்தம் வருவது, நினைவு இழப்பது, சுவாசிப்பதில் சிரமம் போன்றவையும், டெங்குவின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக, டாக்டரின் உதவி பெற வேண்டியது அவசியம்.

நீர்ச்சத்து குறைபாடுடெங்குவிற்கு என்று பிரத்யேக சிகிச்சையும் கிடையாது. 'சப்போர்டிவ் ட்ரீட்மென்ட்' என்று சொல்லப்படும், ஆதரவு சிகிச்சை மட்டுமே தரப்படும். வைரஸ் தொற்றுக்கு, 'ஆன்டி வைரல்' மருந்துகள் கிடையாது. ரத்தக் கசிவு ஏற்பட்டால், தட்டணுக்கள் செலுத்துவோம். தோலில், இளஞ்சிவப்பு நிற தடிப்புகள், வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு என, பிரச்னையின் தீவிரத்திற்கு ஏற்ப, ஆதரவு சிகிச்சை இருக்கும்.மலேரியாமலேரியா இருப்பது உறுதியானால், அதற்கு பிரத்யேக சிகிச்சை உள்ளது. நடுக்கத்துடன் காய்ச்சல், விட்டு விட்டு வரும். சிலருக்கு, காய்ச்சல் வந்த நான்கு மணி நேரத்தில் சரியாகும். அடுத்த நாள் எதுவும் இருக்காது. சிலருக்கோ, தொடர்ந்து காய்ச்சல் இருக்கலாம். இது, மலேரியாவின் அறிகுறிகள்.மலேரியாவை பொறுத்தவரை, 'வைவேக்ஸ், பேப்சிபேரம்' என்று இரு வகைகள் உள்ளன. மலேரியா என்று உறுதியானால், என்ன வகை என்று தெரிந்த பின்பே, சிகிச்சை தர வேண்டும்.இரண்டாவது வகை தீவிரமானது. இதன் பாதிப்பு இருந்தால், மலேரியா குணமான பின்னும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டும். காரணம், சில சமயங்களில், மலேரியாவை உண்டாக்கும் வைரஸ், கல்லீரலில் சென்று பாதுகாப்பாக பதுங்கிக் கொள்ளும்.இதனால், கல்லீரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆறு மாதங்களுக்குப் பின், மீண்டும் மலேரியா தாக்கும். இந்த வகை வைரஸ் கிருமி, ரத்த செல்களை பாதிக்கும். இதனால், ஹீமோகுளோபின் குறைவதற்கானவாய்ப்புகள் உள்ளது.பேப்சிபேரம் வகை கிருமி, ரத்தத்தில் அதிகளவில் தங்கி, உடல் உறுப்புக்களில் உள்ள சிறிய ரத்த குழாய்களை அழிக்கலாம்; அடைப்பை ஏற்படுத்தலாம். எனவே, இந்த வகை மலேரியா பாதிப்பு மிகவும் ஆபத்தானது. ஒரு மாதத்திற்கு முன், மலேரியா பாதிப்பு பரவலாக இருந்தது. தற்போது, வெகுவாக குறைந்துள்ளது.சிக்குன் குனியாகடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு, சிக்குன் குனியா பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவை போலவே, ஆதரவு சிகிச்சை மட்டுமே இதற்கும் தர முடியும். தாங்க முடியாத மூட்டு வலி, காய்ச்சல் இதன் அறிகுறிகள். எவ்வளவு தீவிர வலி இருந்தாலும், மூன்று மாதங்களில் சரியாகி விடும்.ப்ளூ காய்ச்சல்காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன், ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் வைரசில், பல வகைகள் உள்ளன. இதில், ஹெச் 1, என் 1 என்ற வைரஸ், பன்றிக் காய்ச்சலை உருவாக்கக் கூடியது. ஹெச் 3, என் 2 என்பது, இன்னொரு வகை ப்ளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்.ப்ளூ காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ், சுவாச மண்டலத்தின் கீழ்ப் பகுதியை பாதிக்கும் போது, 'இன்புளுசென்சியா நிமோனியா' பாதிப்பு வரலாம். இதுவும், ஆபத்தானது.ப்ளூ பாதிப்பை உண்டாக்கும் வைரசில், ஒவ்வொரு ஆண்டும் மரபணு மாற்றம் ஏற்படுவதால், ஆண்டுதோறும் மழைக்காலம் துவங்குவதற்கு முன், ஆகஸ்ட் மாதத்தில், ப்ளூ தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.டாக்டர் வி.ராமசுப்ரமணியம்தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சென்னை044-4008 0300


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !