நாங்க இப்படிதானுங்க! சிக்கென்று வைக்கிறது சிலம்பம்!
அழகாகத் தோன்ற வேண்டும் என்று மட்டுமே நான் நினைப்பதில்லை. 'ஸ்டிராங்'கா இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதனால், சிலம்பம் பயிற்சியை முறையாக கற்று, தினமும் பயிற்சி செய்கிறேன். அதிகாலையில் ஷூட்டிங் இருந்தாலும், அதற்கு முன்பே, 'ஜிம்'மிற்குப் போய் அன்றைய உடற் பயிற்சிகளையும் செய்து விடுவேன். பசியோடு இருப்பது, ஒருவேளை உணவை தவிர்ப்பது என்பது, எனக்கு பழக்கமில்லை. அதிக புரோட்டீன் உள்ள உணவுகளை சாப்பிடுவேன். இடையிடையே தண்ணீர், பிரஷ் ஜூஸ், இளநீர் குடிப்பேன். திரவ உணவுகள் தான் தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.சமந்தா ரூத் பிரபு, நடிகை