உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்
இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம் சிலர், என்னதான் உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை கூடாமல் இருக்கும்.ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க ே-வையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால் எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன், முட்டை, வான் கோழி, சிக்கன் ஆகியவற்றை, தினமும் அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும். சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும். கார்போஹைட்ரேட்: ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா , சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக்கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான எடை அதிகரிக்கும். உடலுக்கு தினம் குறைந்தது 40 சதவீதம், கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது. கொழுப்புகள்: பாதாம் பருப்பு, ஆலிவ், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர்கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்பு அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10 சதவீதம் கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும்.இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான். உடல் எடையை அதிகரிக்க ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதும் நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன. ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று, எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தமாகவே இருந்தாலும், நஞ்சாக மாறி விடும்....ஜாக்கிரதை!