இருதய நோய் வராமல் தடுக்கும் வால் நட்
* ரத்தக் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வழி உண்டா?கொழுப்பு அதிகரிப்பது தான் இன்றைய பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது தான் முக்கிய காரணமாக உள்ளது. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்த கொழுப்பும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் என பிரிக்கப்படுகிறது. அதிகப்படியான உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது, உடற் பயிற்சி செய்வதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.* உடல் எடையை குறைக்க முக்கியமாக செய்ய வேண்டியது என்ன?உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது. பெரும்பாலான அலுவலகங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கின்றனர். எனினும் உணவு மட்டும் அதிக கலோரிகள் எடுத்து கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடுகிறது. உணவு கட்டுப்பாடு மற்றும் அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதால் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும். நாள் முழுவதும் சரியான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.* இருதய நோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியுமா?பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும், அதிசய பண்புகளையும் பெற்றுள்ளன. குறிப்பாக வால் நட் சாப்பிடுவது சிறப்பானது. இது அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை மூளைக்கு கடத்த வால் நட்டில் உள்ள சத்துக்கள் மிகவும் உதவி புரிகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இருதய நோய்கள் வராமல் காக்கிறது. தினமும் 5 வால் நட்ஸ் சாப்பிட்டால் இருதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம். இதன் விலை பீஸாவை எனும் உடனடி உணவை விட குறைவு தான்.- டாக்டர் மதுமிதா, ஓமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.93630 44444