உள்ளூர் செய்திகள்

வெயில் பாதிப்பை தடுக்கும் தண்ணீர்

வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்:1. கடும் வெயிலால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 2. வெயிலில் இருந்து தப்ப நினைப்பவர்கள், 'ஏசி' யில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் 'ஏசி' யில் இருக்க கூடாது. 3. ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிதமான குளிர்ச்சியில் குடிக்கலாம். 4. சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். பழங்கள் சாப்பிடலாம். 5. காபி, டீ, டின், பாட்டில் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். 6. வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அம்மை, வியர்க்குரு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. 7. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, தண்ணீர் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. 8. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். 9. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள், 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை, 6:00 முதல், 8:00 மணி வரையும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரையும் விளையாடலாம். 10. சத்துகள் மற்றும் ஆக்சிஜனை, செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்