நாங்க இப்படிதானுங்க! - மகிழ்ச்சியான தருணம் இது!
துாங்கவே நேரம் இல்லை; சில நாட்களுக்கு முன் பிறந்த என் மகள், அழும் நேரமெல்லாம் தாய்ப்பால் தருகிறேன். 'சிசேரியன்' மூலம் குழந்தை பெற்றதில், தாய்ப்பால் தருவது உடலளவில் சற்று சிரமமாக உள்ளது.உடல் வேதனையும், அடிக்கடி பால் தர வேண்டிய நிர்ப்பந்தமும், சமயங்களில், கடினமாக இருந்தாலும், தாய்ப்பால் தரும் உணர்வு, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.தாய்ப்பால் மட்டுமே தர வேண்டுமா, முடியாத நேரங்களில் புட்டிப்பால் தரலாமா அல்லது இரண்டையும் மாற்றி மாற்றி தரலாமா என்பதற்கு, தெளிவான பதில், யாரும் சொல்வதில்லை. என்னைப் போலவே எல்லா அம்மாக்களும், குழந்தைக்கு இயற்கையான, ஆரோக்கியமான உணவைத் தருவதற்காக, உடலளவில் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்கின்றனர் என்றே நம்புகிறேன்.சமீரா ரெட்டி, நடிகை