நாங்க இப்படிதானுங்க!: பார்ப்பதே ஹோலி தான்!
அசாதாரணமான உடற்கட்டு தான், சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தந்தது. அவரின் பட, 'ரிலீஸ்' அல்லது ஸ்டேஜ் ஷோ என, எதுவானாலும், சல்மானின் உடற்கட்டு பார்ப்பதற்கு, ஹோலி கொண்டாடுவதைப் போல கூட்டம் சேரும். துவக்கத்தில், அதிக மசாலா சேர்த்த இந்திய உணவுகள், சல்மானின், 'பேவரைட்' ஆக இருந்தன. என்றைக்கு, 'பிட்'டாக இருக்க வேண்டும் என விரும்பினாரோ, அன்றே, மொத்த உணவு பழக்கத்தையும் மாற்றி விட்டார்.'எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும், நாம் சாப்பிடும் உணவு தான், நம்மை, 'பிட்'டாக வைக்கும்' எனச் சொல்லும் சல்மான், தினமும் உடற்பயிற்சி மூலம், 3,000 கலோரிகளை எரிக்கிறார். 20 ஆண்டுகளாக, அசாதாரண உடற்கட்டை பராமரிக்கும் சல்மானின், ஒர்க் - அவுட், வேறு யாராலும் நினைத்து பார்க்க முடியாதது.தினமும், மூன்று மணி நேரம் ஜிம்மில், 2,000 சிட் - அப்ஸ், 1,000 புஷ் - அப்ஸ், வயிறு தசைகளுக்கு, 500 அசைவுகள்... தவிர, 10 கி.மீ., துாரம் சைக்கிளிங், ஜாகிங்... இது தான், சல்மான் கான்!- சல்மான் கான், பாலிவுட் நடிகர், மும்பை.