உள்ளூர் செய்திகள்

நாங்க இப்படிதானுங்க! - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்!

நுாடுல்ஸ் உட்பட, பல வெளிநாட்டு உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்கும் அமிதா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.இளைஞனாக இருந்த போது, வேலைக்கு நடுவில், வெளியில் இருந்து விரும்பிய உணவை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டவன். வயதான பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டேன்.படப்பிடிப்பிற்குச் சென்றால், அலுவலகம் செல்பவர்களைப் போல, மதிய உணவை வீட்டில் இருந்து எடுத்துச் செல்கிறேன். அதில், பெரும்பாலும் சப்பாத்தி, ஏதாவது ஒரு காய் சேர்த்த பருப்புக் கூட்டு இருக்கும்.வெளியூர், வெளிநாடு என்றால், ஊட்டச்சத்து நிபுணரையும் உடன் அழைத்துச் செல்வேன். காலை உணவு முளைக்கட்டிய பயறு மட்டுமே. சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறேன்.எப்போதாவது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சாப்பிடுவேன். காபி, டீ பழக்கம் இல்லை. பாஸ்தா, சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றாலும், சாப்பிடுவதில்லை.அமிதா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்