உள்ளூர் செய்திகள்

உணவுக்குழாய் புற்றுநோய் அறிகுறிகள் என்னென்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல் உணவை விழுங்குவதில் கஷ்டம், நெஞ்சில் அடைப்பு, ஏப்பம், பசியின்மை, அஜீரணம், எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உணவுக் குழாயில் புற்றுநோய் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. இந்த புற்றுநோய் யாருக்கு அதிகம் வருகிறது என்றால், கருகலாக பொறித்த, வறுத்தெடுத்த உணவை உண்பவர்களின் உணவுக்குழாயில் இந்தக் கருகல் ஹைட்ரோ கார்பன் ரசாயனமாக மாறி படிந்து விடுகிறது. இந்த படிவு தசைகளின் செல்களில் மறுவிளைவை உண்டாக்கும்போது, செல்கள் பன்மடங்காக தேவையின்றி பெருகி, புற்றுநோயை உண்டாக்குகிறது. இரண்டாவதாக மது மற்றும் புகையிலையை பயன்படுத்துவர்களுக்கும், இந்த நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம். ரத்த சோகையோடு உணவு விழுங்க முடியாத நிலை, உணவுக் குழாய் அடிப்பகுதியில் பிறவியிலேயே சுருக்கம்(Oஞுண்ணிணீடச்ஞ்ஞுச்டூ ஙிஞுஞ ), இரைப்பை ஏற்றம் ஆகியவை இப்புற்றுநோயை உண்டாக்கலாம். ஊட்டச் சத்துக்களான தாதுப் பொருட்கள் பற்றாக்குறை, உயிர்ச்சத்து குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை, டீ முதலிய பானங்களை மிகச் சூடாக அருந்துதல் ஆகியவை உணவுக் குழாய் புற்று நோய் உண்டாக காரணங்களாக அமைகின்றன. வழிவழியாக வரும் பரம்பரை வியாதியான 'டைலோசிஸ் உள்ளவர்களுக்கும் இப்புற்றுநோய் உண்டாகலாம். எண்டோஸ்கோப்பி மூலம் இந்த நோயின் பிரச்னையை கண்டுபிடித்து, உணவு விழுங்குவதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதும், அறுவை சிகிச்சை மூலமாக விழுங்கிய பொருள் உள்ளே செல்ல, குழாய் மூலம் உணவுக்குழாயையே செயற்கையாக உருவாக்கிக் கொடுப்பதும், ஆரம்பநிலையில் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பதும் நவீன சிகிச்சையால் சாத்தியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !