உள்ளூர் செய்திகள்

கால்கள் வீக்கம் ஏற்படுவது எதனால்?

* கே. முத்துராஜ், தேனி: என் தந்தையின் வயது, 68. சர்க்கரை நோய் இல்லை; உயர் ரத்தஅழுத்தம் உள்ளது. ஒரு மாதமாக கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இது எதனால்?கால்களில் வீக்கம் ஏற்பட, பல்வேறு காரணங்கள் உள்ளன. ரத்த சோகை, ரத்தத்தில் பல்வேறு குறைபாடுகள், ரத்தத்தில் புரோட்டீன் குறைவு, இதய, சிறுநீரக, வயிற்றுக் கோளாறுகள், கால்களின் ரத்த நாளங்களில் கோளாறு ஆகியவை முக்கியமானவை. சில ரத்த அழுத்த மருந்துகளும், கால் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற்று, சில பரிசோதனைகளை செய்து, எதனால் கால்வீக்கம் ஏற்படுகிறது என, கண்டறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்