எப்போதும் வியர்வை கொட்டுவது ஏன்?
கோதண்டபாணி வில்லிவாக்கம், சென்னை: எனக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளது. தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எல்லா நேரங்களிலும் எனக்கு நிறைய வியர்வை கொட்டுகிறது. பல முறை குளித்து உடை மாற்ற வேண்டியுள்ளது. வியர்வை பிரச்னைக்கு என்ன தான் தீர்வு?வழக்கமான பிரச்னை தான்; ஒன்றும் பயப்பட வேண்டாம். 'வைட்டமின்- சி' குறைபாடுதான் காரணம். நீங்கள் அதிகம் டீ குடிப்பவராக இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு என்ற அளவில் குறைத்து விடுங்கள். அதற்கு பதிலாக, தினமும் ஜூஸ், சர்பத், நன்னாரி சர்பத் சாப்பிடுவது நல்லது. அத்துடன், விட்டமின்-சி கொண்ட, லிம்சீ (limcee), சுக்சீ (sukcee), சிட்ரோவைட் (citrovite) என்ற மாத்திரைகளில் ஏதேனும் ஒன்றை, தினமும் இரண்டு முறை வாயில் வைத்து சுவைச்சு சாப்பிடுதால், வியர்வை பிரச்னை வெகுவாக குறையும்.