உள்ளூர் செய்திகள்

நான்கில் ஒன்று சொல்

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.1. சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகவும், பழங்குடியின மக்களின் அடையாளமாகவும் விளங்கிய யாரின் 150வது பிறந்தநாளை (நவ. 15), நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்?அ. வீர் சாவர்க்கர்ஆ. பிர்ஸா முண்டாஇ. தலக்கால் சந்துஈ. ராம்ஜி கோண்ட்2. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மொத்தம் 37.50 ஜிகாவாட் திறன் கொண்ட, எத்தனை சோலார் பூங்காக்களை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?அ. 50ஆ. 25இ. 30ஈ. 403. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸின் மூதாதையர் வசித்த கிராமமான துளசேந்திரபுரம், தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?அ. அரியலூர்ஆ. கோவைஇ. செங்கல்பட்டுஈ. திருவாரூர்4. இந்திய அரசின் நாணய அச்சடிப்பு நிறுவனம், இந்தியாவின் எந்த இரு பகுதிகளில் இயங்கி வருகிறது?அ. சென்னை, பெங்களூருஆ. மும்பை, ஹைதராபாத்இ. கோல்கட்டா, ஆக்ராஈ. ஜெய்ப்பூர், நாக்பூர்5. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் வெற்றி பெற்றுள்ளனர்?அ. ஐந்துஆ. எட்டுஇ. ஆறுஈ. மூன்று6. பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவரும், பொருளாதார நிபுணருமான யார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்?அ. ஷியாம் குல்கர்னிஆ. விவேக் சந்த்இ. விவேக் டெப்ராய்ஈ. சரவண பிரசாத்7. இந்தியா -- பூட்டான் இடையேயான முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, எந்த மாநில எல்லையில் உள்ள டரங்கா எனும் பகுதியில், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது?அ. மேற்குவங்கம்ஆ. சிக்கிம்இ. அருணாச்சல பிரதேசம்ஈ. அசாம்8. இந்திய ஹாக்கி அணி தனது எத்தனையாவது ஆண்டில், சமீபத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது?அ. 150ஆ. 50இ. 100ஈ. 75விடைகள்: 1.ஆ, 2.அ, 3.ஈ, 4.ஆ, 5.இ, 6.இ, 7.ஈ, 8.இ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !