2,400 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பல் கண்டுபிடிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் பல்கேரியா அருகில் கருங்கடல் பகுதியில் மூழ்கிக்கிடக்கும், மிகவும் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சுமார் 2,400 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இக்கப்பல் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கும் கீழ், ஆக்சிஜன் இல்லாத பகுதியில் மூழ்கிக் கிடப்பதால், அதன் பாகங்கள் பெரிய அளவில் சிதிலமடையாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கடல் எச்சங்களில் இந்தக் கப்பல்தான் மிகவும் பழையது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.