உள்ளூர் செய்திகள்

தமிம் 6000

வங்கதேசத்தில் தாகா பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. சேவரில் நடந்த போட்டியில் அபாஹனி, காஜி அணிகள் மோதின. முதலில் விளையாடிய அபாஹனி அணிக்கு கேப்டன் தமிம் இக்பால், 38 ரன்கள் எடுத்தபோது, 'லிஸ்ட் ஏ' போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனை படைத்தார். இதில் தமிம் (55) அரை சதம் கடக்க, அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. இதை விரட்டிய காஜி அணி 48.1 ஓவரில் 244 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி', 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !