உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் 831 பேர் பெரும் பணக்காரர்கள்

நிதி சேவை நிறுவனங்களான ஹூரன் மற்றும் பார்க்ளேஸ் ஆகியவை, இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி, ரூ. 3.71 லட்சம் கோடி சொத்துகளுடன் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். ரூ.1.59 லட்சம் கோடி சொத்துகளுடன் எஸ்.பி. இந்துஜா குடும்பம் 2வது இடத்திலும், ரூ.1.15 லட்சம் கோடி சொத்துகளுடன் எல்.என். மிட்டல் குடும்பம் 3வது இடத்திலும் உள்ளன. 214 பேர் இப்பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். இந்தியாவில் ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து உடையவர்கள் எண்ணிக்கை 831ஆக உள்ளது. அமெரிக்கா, சீனாவிற்குப் பிறகு பெரும் பணக்காரர்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !