பறவைகள் பெற்ற வரம்
பறவைகள் பறப்பதற்கு உதவும் இறக்கை, பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், அளவுகளால் ஆனது. இணையைத் தேர்ந்தெடுப்பதிலும், எதிரிகளிடமிருந்து தப்பிப்பதிலும் இறகுகளின் வண்ணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இறக்கை வகைகள்01. கழுகு (Eagle)* எதிரிடையாக உயரும் இறக்கைகள் (Passive Soaring Wings - பாசிவ் சோரிங் விங்ஸ்)* அதிக உயரத்தில் பறக்கும் பறவைகளில் காணப்படும். 02. கடற் காகம் (Sea Gull)* நேரிடையாக உயரும் இறக்கைகள் (Active soaring wings -- ஆக்டிவ் சோரிங் விங்ஸ்)* கடற்பறவை, நெடுந்தொலைவு பறக்கும் பறவைகளுக்கு இருக்கும்.03. காகம் (Crow)* நீள் வட்ட இறக்கைகள் (Elliptical wings - எலிப்டிகல் விங்ஸ்)* சிறிய வகைப் பறவைகளில் காணப்படும். இறக்கைகளை வேகமாக அடிக்கும்.04. உழவாரன் (Swifts)* அதிவேக இறக்கைகள் (High-speed wings - ஹை ஸ்பீடு விங்ஸ்)* இவை அதிவேகமாகப் பறக்க உதவுகின்றன.05. தேன்சிட்டு (Hummingbird)* தாழப் பறக்கும் இறக்கைகள் (Hovering wings - - ஹோவரிங் விங்ஸ்)* தாழ்வான பகுதிகளில் வேகமாகப் பறக்கும் சிறிய வகைப் பறவைகளில் காணப்படும். - கிருபா நந்தினி