அறிவை வளர்க்கும் பட்டம்
பட்டம் வந்தது பாருபடிக்கச் செய்தி நூறுஅட்டைப் படங்கள் ஜோருஅக்கம் பக்கம் கூறு!குட்டிச் செய்தி உண்டுகதைகள் கூட உண்டுவட்டம் போட்டுக் கொண்டுவாசி! பலன்கள் உண்டு!வெங்கி மாமா பதிலும்விதவித மாய்ப் புதிரும்பொங்கித் ததும்பும் பட்டம்படித்தால் தொடலாம் உச்சம்!அன்பைச் சொல்லும் பட்டம்அறிவை வளர்க்கும் பட்டம்இன்பம் கூட்டும் பட்டம்என்றும் படிப்போம் பட்டம்!- துஷ்யந்த் சரவணராஜ், அரசு மேல்நிலைப் பள்ளி, கிருங்காக்கோட்டை.