உள்ளூர் செய்திகள்

வேலியில் ஒரு மூலிகை

வேலிப்பருத்திஆங்கிலப் பெயர்: 'ஸ்டிங்கிங் ஸ்வாலோவோர்ட்' (Stinking Swallowort)தாவரவியல் பெயர் : 'டேமியா எக்ஸ்டென்ஸ்' (Daemia Extens) வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை, உத்தாமணி, வேலிக்கால், வேலிகம், வேலிப்பாகல், வேலிமுறை, வேலிகட்டுதமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படும் வேலிப்பருத்தி ஒரு மூலிகைச் செடி. 'அஸ்கிலிபியாடாசியே' (Asclepiadaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வேலிகளுக்கு அருகில் கொடியாகப் படர்ந்து வளருவதால், இதற்கு வேலிப்பருத்தி என்று பெயர். இந்தச் செடிக்கு உத்தாமணி என்ற வேறொரு பெயரும் உண்டு. பசுமையான இதன் இலைகள், இதய வடிவத்தில் இருக்கும். மணமுடைய பூங்கொத்துகளும், மென்மையாக வளையும் முட்களைக் கொண்ட இரட்டைக் காய்களையும் உடையது. இதன் கொடியின் உள்ளே பிசின் போன்ற பால் நிறைந்திருக்கும். காய்கள், காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்ந்து பறக்கும். இதன் மூலம் இந்தச் செடி இனப்பெருக்கம் அடைகிறது.இதன் இலைகள், வேர் போன்றவை, மருத்துவ குணம் கொண்டவை. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், இதன் இலைகளும் வேர்களும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.- கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !