உள்ளூர் செய்திகள்

தினமும் ஒரு மாதுளை!

மாதுளைபொமேகிரானட் (Pomegranate)தாவரவியல் பெயர்: புனிகா கிரானடம் (Punica granatum)தாயகம்: ஈரான்பழ வகைகளில் மிகவும் பழமையானது மாதுளை. இந்தியாவிற்கு ஈரான் வணிகர்கள் அறிமுகம் செய்தனர். இங்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் போதே மாதுளம் பழங்கள் பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.வெப்பமண்டலங்களில் அதிகம் விளையும். ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் போன்ற இடங்களில் மாதுளை முக்கிய பயிர்களில் ஒன்று. சிறுமர வகையைச் சேர்ந்தது; அதிக அளவில் பராமரிப்புச் செலவு இருப்பதில்லை. வெளிநாடுகளில் 'சைனீஸ் ஆப்பிள்' என்று மாதுளை அறியப்படுகிறது. இந்தியாவை அடுத்து, சீனாவில்தான் மாதுளை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் 720 வகையான மாதுளைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் அளவு, சுவை, விதைகளின் நிறம் ஆகியவை மாறுபடும். சந்தைகளில் இந்தப் பழம் மூன்று சுவைகளில் கிடைக்கின்றன. புளிப்பு, உவர்ப்பு, இனிப்பு ஆகிய சுவைகளில் இருக்கும்.நாட்டுரக மாதுளைகள் அளவில் சிறியதாகவும், உவர்ப்புச் சுவையுடனும் இருக்கும். ஆலந்தி, மஸ்கட் ரெட் ஆகிய ரகமும் மிகவும் பிரபலமானது. இந்த இனங்களில் இருக்கும் பழ முத்துக்கள் பெரும்பாலும் இரத்தச் சிவப்பும் அல்லது இளஞ்சிவப்புடனும் காணப்படும். இந்த நிறத்தில் இருக்கும் பழங்களுக்கு மருத்துவ குணம் உண்டு. மாதுளையில் மருத்துவப் பயன்கள் அதிகம் உள்ளதால், இதற்கான தேவை ஆண்டு முழுவதும் சந்தையில் இருக்கிறது. மாதுளம் பழம் இரத்தச் சோகையை குணமாக்கும். உடல்நிலை சரியில்லாதவர்கள், ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வு நீங்கும். உச்சி முதல் பாதம் வரை உடலில் உள்ள பல பிரச்னைகளுக்கு மாதுளை நிச்சயம் நல்லத் தீர்வைக் கொடுக்கும். அதனால்தான் இந்தியா, மாதுளை உற்பத்தியில் உலகின் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !