டயர்களை உருக்கும் சாலை
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆதர்டன் டேபிள்லேன்ட்ஸ் (Atherton Tablelands) என்னுமிடத்தில் உள்ள சாலை கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டது. அச்சாலையில் புதிதாகத் தார் போடப்பட்டிருந்தது.ஒரு வாரமாக நிலவிய கடுமையான வெப்பநிலையால், தார் உருகி சாலையில் சென்ற வாகனங்களின் சக்கரத்தில் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தது. இதனால், வாகனங்களின் டயர்களும் வாகனங்களும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் போக்குவரத்துத் துறை, இச்சாலையை உடனடியாக மூடியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.