சின்னதாக ஒரு நாடு
உலகின் மிகச் சிறிய ஜனநாயக நாடு 'சான் மரினோ' (San Marino). ஐரோப்பா கண்டத்தில் உள்ள இந்த நாடு சுற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடுகளான வாட்டிகன் (Vatican City), மொனாகோ (Monaco) நாடுகளை விடச் சிறிய நாடு இது. சுமார் 30,000 மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 62 சதுர கி.மீ. சான் மரினோ நாட்டை, நாடாளுமன்றத்தின் நிர்வாகக் குழு ஆட்சி செய்கிறது. இந்த நாட்டுக்கென, தனி ராணுவமும் இருக்கிறது. இதன் நாணயம் யூரோ. சான் மரினோ நாடு இத்தாலியின் பல பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறது. இங்கு இரு ஆறுகள் பாய்ந்தாலும், நீர் வழிப் போக்குவரத்து கிடையாது. மொத்தமும் சாலை வழிப் போக்குவரத்துதான். 220 கிலோ மீட்டருக்கு சாலைகளும், மலைகளுக்கு இடையே கம்பி வட ஊர்தி சேவைகளும் உண்டு. வருடத்திற்கு 20 லட்சத்துக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் சான் மரினோவிற்கு வருகின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டே இந்த நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது.