உள்ளூர் செய்திகள்

மொத்தம் 31 விரல்கள்

மூன்று மாதங்களுக்கு முன் சீனாவில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பொதுவாக கை, கால்களில் 20 விரல்கள் இருக்கும். ஆனால், அந்தக் குழந்தைக்கு கைகளில் 15 விரல்களும் பாதங்களில் 16 விரல்களுமாக 31 விரல்கள் இருந்தன. மருத்துவர்கள் வியந்தனர். குழந்தையின் தாயும் இது போல அதிக விரல்கள் உள்ளவர்தான். எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !