உள்ளூர் செய்திகள்

வெப்பமண்டலத்தில் கிடைத்த இனிப்புப்பழம்!

கொய்யாஆங்கிலப் பெயர்: குவா (Guava)தாவரவியல் பெயர்: சிடியம் குவாஜாவா (Psidium guajava)தாயகம்: தென் அமெரிக்கா, கரீபியன்வளரும் இடங்கள்: வெப்ப மண்டலம், மிதமான வெப்ப மண்டலம்.குட்டையாக வளரும் மர வகையைச் சேர்ந்தது. தென் அமெரிக்காவில் இருந்து போர்ச்சுகல் வணிகர்களால் அறிமுகமானது. பல ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் அறிமுகமானதால், அந்நியப் பழமாக அறியப்படுவதில்லை. கொய்யாவின் தாயகம் வேறு நாடாக இருந்தும், நம் நாட்டுப் பழமாகவே நினைக்கிறோம்.இந்தியாவில் பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கொய்யா உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற வெப்ப மண்டல மாநிலங்களில் வளர்க்கப்பட்டாலும், உள்ளூர் தேவைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் ஏற்றுமதியை மனத்தில் வைத்து உற்பத்தி செய்கின்றன. காயாக இருக்கும்போது துவர்ப்பும், பழமானதும் இனிப்புச் சுவையுடன் காணப்படும். கொய்யாவில் பல வகையான இரகங்கள் வந்துவிட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட இரகங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. வெப்ப மண்டலங்களில் எளிதில் வளரும் என்பதால், வெப்பமண்டல நாடுகள் இப்பழ மரத்தை வளர்க்கின்றன. கொய்யா மரம் எளிதில் வளரக்கூடிய மரம் என்பதால், வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, கென்யா, தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. கொய்யா உற்பத்தியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. மே, ஜூன் மாதங்களைத்தவிர ஆண்டு முழுவதும் கொய்யாப்பழம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !