உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: பெட்டியில் பந்துகள்!

ஒரு பெட்டியில் ஒன்பது பந்துகள் இருந்தன. அவை,1 முதல் 9 வரையிலான எண்களால் குறிப்பிடப் பட்டிருந்தன. மூன்று சிறுவர்கள், தலா மூன்று பந்துகளைப் பெட்டியிலிருந்து எடுத்தனர். மூவருக்கும் மற்றவர் எடுத்த பந்துகளின் எண்கள் பற்றித் தெரியாது.ஆனால், மூவரும், தலா ஒரு க்ளூவை தெரிவித்து, பிறரது பந்துகளின் எண்களை அறிந்தனர்.க்ளூ இவை தான்:முதல் நபர்: என்னிடம் இருக்கும் மூன்று பந்துகளின் எண்களைப் பெருக்கினால் 63 கிடைக்கும்.இரண்டாவது நபர்: என்னிடம் இருக்கும் மூன்று பந்துகளின் எண்களைப் பெருக்கினால் 48 கிடைக்கும்.மூன்றாவது நபர்: என்னிடம் இருக்கும் மூன்று பந்துகளின் எண்களைக் கூட்டினால் 16 கிடைக்கும்.எனில், யார் யாரிடம் எந்தெந்த எண்கள் கொண்ட பந்துகள் இருக்கும் என, கண்டுபிடிக்க முடியுமா?விடைகள்முதல் நபரிடம்: 1, 7, 9.இரண்டாவது நபரிடம்: 2, 4, 6.மூன்றாவது நபரிடம்: 3, 5, 8.விளக்கம்: மொத்தமுள்ள ஒன்பது எண்களில், 1, 7, 9 ஆகிய எண்களின் பெருக்குத் தொகை மட்டுமே 63 என்ற மதிப்பைக் கொடுக்கும். எனவே, முதல் நபர் எடுத்த பந்துகளின் எண்கள் 1, 7, 9.இப்போது, 2, 3, 4, 5, 6, 8 ஆகிய எண்கள் மீதம் இருக்கும். இவற்றில், இரண்டாவது நபர் ஏதேனும் மூன்று எண்களைப் பெருக்கினால், 48 என்று கிடைக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள்: 2, 3, 8 அல்லது 2, 4, 6. இதன் அடிப்படையில், மூன்றாவது நபர் எடுத்த பந்துகளின் எண்களை அறியலாம். இவரின் மூன்று பந்துகளின் கூடுதல் 16 என்று வர வேண்டும் அல்லவா! ஆக, இரண்டாவது நபரின் ஒரு வாய்ப்பான 2, 4, 6 ஆகிய எண்களை விட்டுவிட்டு, மீதமிருக்கும்3, 5, 8 ஆகிய எண்களைக் கூட்டினால், 16 கிடைப்பதை அறியலாம். இதிலிருந்து, மூன்றாவது நபர் எடுத்த பந்துகளின் எண்கள் 3, 5, 8. மேலும், இரண்டாவது நபர் எடுத்த பந்துகளின் எண்கள் 2, 4, 6 என்பதைத் தீர்மானிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !