களத்தில் கணக்கு: கையில் கணக்கு!
என் கையில் மூன்று இலக்க எண் உள்ளது. சில குறிப்புகள் தருகிறேன். அந்த எண்ணைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.ஒற்றைப்படை எண்.ஐந்தால் வகுபடும்.மூன்று இலக்கங்களும் வெவ்வேறானவை.மூன்று இலக்க எண்களின் கூட்டுத்தொகை 8.பத்துகள் இடத்தில் வரும் இலக்கம், நூறுகள் இடத்தில் வரும் இலக்கத்தைவிட குறைவான எண்ணாகும்.300ஐவிட குறைவானது.மூன்று இலக்கங்களில் ஒரே ஒரு இலக்கம் மட்டும், இரட்டைப்படை எண்ணாக இருக்கும்.விடை: 215விளக்கம்: மூன்றிலக்க எண். அது ஒற்றைப்படை எண் என்றால் 1,3,5,7,9 ஆகிய எண்களில், ஓர் எண் மட்டும் கடைசி இலக்கத்தில் வரும். ஐந்தால் வகுபடும் என்றால், கடைசி இலக்கம் 0 அல்லது 5இல் முடிவடையும். ஒற்றைப்படை எண் என்று சொன்னதால், கடைசி இலக்கம் 5. ஒவ்வொரு இலக்கமும் வெவ்வேறானவை. மொத்த இலக்கங்களைக் கூட்டினால் 8 வர வேண்டும். ஆக, ஏற்கெனவே, கடைசி இலக்கம் 5 என்று நமக்குத் தெரியும். ஆக, மொத்த வாய்ப்புகள்: 125, 215, 305 ஆகிய எண்களே.பத்துகள் இடத்தில் வரும் இலக்கம், நூறுகள் இடமதிப்பில் இடம்பெறும் இலக்கத்தைவிட குறைவு என்பதால், 215 அல்லது 305 ஆகிய இரு மூன்று இலக்க எண்கள் விடையாக இருக்க வாய்ப்புண்டு.அடுத்து, 300ஐவிட குறைவு என்பதால் விடை 215 என அறியலாம்.