களத்தில் கணக்கு: உயரம் என்ன?
இங்கே இரு படங்கள் உள்ளன. படங்களில் உள்ள அளவுகளைப் பயன்படுத்தி, மேசையின் உயரம் காண்க. விடை: 150 செ.மீ.மேசையின் உயரத்தை A என்க. அதேபோல், முயலின் உயரத்தை B என்றும், ஆமையின் உயரத்தை C என்றும் வைத்துக் கொள்ளலாம்.இப்போது முதல் படத்தில் உள்ள தகவலின்படி, A+B-C = 170 செ.மீ. ...(i) என்று எழுதலாம் அல்லவா!அதேபோல், இரண்டாம் படத்தில் உள்ள தகவலின்படி, A-B+C = 130 செ.மீ. ...(ii) என்று எழுதலாம்.ஆக, (i)+(ii) = A+B--C+A--B+C = 170+130=> 2A = 300=> A = 300/2A = 150.ஆக, மேசையின் உயரம் = 150 செ.மீ.