அடேங்கப்பா! - திப்பு துப்பாக்கி ஏலம்!
18-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்துப் போராடியவர். மைசூர் அருகேயுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில், திப்பு கொல்லப்பட்டார். பின்னர், இவர் பயன்படுத்திய பொருட்களைச் சூறையாடிய ஆங்கிலேய பிரபுக்கள், அதை லண்டனுக்கு கொண்டு சென்றனர். தற்போது, லண்டனில் அது ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், 98 லட்சம் ரூபாய்க்கும், வெள்ளிப்பூண் போட்ட 'பிளின்ட்லாக்' வகைத் துப்பாக்கி, 55 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.