அழியப்போகும் அமேசான்?
இயற்கையை அழிப்பதில், உலகம் முழுவதும், மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். உலகின் 2வது நீளமான ஆறு அமேசான். மிகப்பெரும் வனப்பகுதி அமேசான். இந்தப் பெருமைகளைக் கொண்ட அமேசான், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் பேராசையால் மோசமான அழிவை எதிர்நோக்கி உள்ளது.ஏற்கெனவே வனப்பகுதியின் பெரும்பகுதியை வேகமாக அழித்து வருகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.இப்போது, அங்கே ஓடும் ஆற்றின் குறுக்கே, புதிய அணைகளைக் கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது பிரேசில். நீர் மின் உற்பத்திக்காக 400க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இப்பணியை மேற்கொண்டால், அமேசான் நதி மற்றும் அதனுடன் இணைந்த கிளை நதிகளோடு, வனம் மற்றும் அதில் வாழும் ஆயிரக்கணக்கான அபூர்வ உயிரினங்களும் அழிந்துவிடும் வாய்ப்புள்ளதாக, இயற்கை ஆய்வாளர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், இவர்களின் குரலுக்கு, அரசு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.