உள்ளூர் செய்திகள்

பழங்கால சிலைகளை ஒப்படைத்தது அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 200 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை, பிரதமர் மோடியிடம் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் லோரட்டா லின்ச் ஒப்படைத்தார். “இரு நாடுகளின் உறவுகளை மதிப்பதுடன், மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தையும் மதித்து இந்தச் சிலைகளை ஒப்படைத்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்” என்றார் மோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !