உள்ளூர் செய்திகள்

ஆவலூட்டும் அவல் பிரியாணி

அடுப்பைப் பற்றவைக்க வேண்டியதில்லை. சரியாக வெந்ததா, கிளறி விட்டோமா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. எளிமையாகச் செய்யக்கூடிய, சத்து அதிகம் நிறைந்த, பிரியாணி போன்ற உணவை நாமே செய்யலாம். ஆவலை அதிகம் தூண்டுகிறதா? அதுதான் அவல் பிரியாணி. எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?அவல் பிரியாணி தேவையான பொருட்கள்* அவல்* தேங்காய்ப் பால்* பட்டை* கிராம்பு* சோம்பு* இஞ்சி* பூண்டு* புதினா* கறிவேப்பிலை* கொத்தமல்லி* உப்புசெய்முறை: அவலை சுத்தப்படுத்தி, தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டிக் கிளறினால் அவல் பிரியாணி தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய்ப் பால் பச்சடி செய்துகொள்ளலாம்.தேங்காய்ப் பால் பச்சடிதேவையான பொருட்கள்* தேங்காய்ப் பால்* எலுமிச்சம் பழம்* வெங்காயம்* கேரட்* வெள்ளரிக்காய்செய்முறை: தேங்காய்ப் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அரை மணிநேரம் கழித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், வெள்ளரிக்காய் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான தேங்காய்ப் பால் பச்சடி தயார்!எளிமையான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த அவல் பிரியாணியும், தேங்காய்ப் பால் பச்சடியும் மிகுந்த சத்து நிறைந்தவை. சாப்பிட ருசியாகவும் இருக்கும். செய்து, உண்டு மகிழுங்கள்.- கி.சாந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !