இரத்தசோகைக்குத் தீர்வு!
அமெரிக்காவின் ஹிஸ்டரி தொலைக்காட்சியில், “An idea to change History” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பெரு நாட்டைச் சேர்ந்த ஜூலியோ பாரியோஸ் என்பவர் முதற்பரிசை வென்றுள்ளார். ஆம்! அவர் உருவாக்கியுள்ள பிஸ்கெட் 30 நாட்களில் இரத்தசோகையைக் குணமாக்குகிறது. நியூட்ரி ஹெச் (Nutri H) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிஸ்கெட்டுக்கு, இந்த விருது கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.