உள்ளூர் செய்திகள்

நாம் இணைந்தால் எதுவும் முடியும்

உலகின் எந்தவொரு நாட்டையும் விட, கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த நாடு இந்தியா. தெருவில் விளையாடும் சாதாரண சிறுவன் கூட ஆட்ட நுணுக்கங்களை விரிவாக அலசும் அளவுக்கு இந்திய இளைஞர்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது கிரிக்கெட்.ஆனால், இன்றைய இந்தியாவில் கிரிக்கெட் தாக்கம் செலுத்தும் அளவுக்கு 1970களில் இல்லை. பத்தோடு பதினொன்றாக இந்திய கிரிக்கெட் அணி இருந்தது. ஒருநாள் போட்டியைக் கூட, டெஸ்ட் போட்டி போல இந்திய அணி ஆடி வந்தது. ஆனால், இந்திய அணி ஒரு நாள் உலகக்கோப்பையைக் கைப்பற்றிய போது, ஒட்டுமொத்த தேசமும் திக்குமுக்காடிப்போனது.அதற்குக் காரணம் கபில்தேவ். 1982ம் ஆண்டு, இந்திய அணி, உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்றது. சில அசாதாரண இன்னிங்ஸ்களை விளையாடி, இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. அன்றைய மேற்கிந்தியத் தீவுகள் அணி, கிரிக்கெட்டில் ராட்சச பலத்துடன் இருந்தது. இந்தியாவோ சின்னஞ்சிறு சிறுவன்.“இந்தியா உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லாது” என்று மிகப் பிரபலமான விளையாட்டு பத்திரிகையான விஸ்டனின் எடித்தர் என்ற பொறுப்பாசிரியர் சவால் விட்டார். ஆனால், 'கபில் டெவில்ஸ்' கோப்பையைத் தூக்கி வந்தது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி அன்று கபில்தேவின் சாத்தான்கள் என்ற செல்லப் பெயரில் அழைக்கப்பட்டது. இதைச் சாத்தியமாக்கியவர் கபில்.பதிமூன்று வயது சிறுவனாக இருந்தபோது, கிரிக்கெட்டை வேடிக்கை பார்க்கச் சென்றார் கபில். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவு அப்போது இல்லை. கம்பிக்கு வெளியிலிருந்து விளையாட்டை வேடிக்கை பார்த்தபோது, ஒருவர் அவரை மைதானத்துக்குள் தள்ளிவிட்டார். அப்போது தொடங்கியதுதான் கபிலின் கிரிக்கெட் பயணம். இந்திய அணி இன்றிருக்கும் இடத்துக்கு அவ்வளவு சுலபத்தில் வளர்ந்துவிடவில்லை. அந்த வளர்ச்சியின் பின்னணியில் கபில் என்ற தனிமனிதரின் பங்களிப்பும் இருந்துள்ளது. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.வாய்ப்பைப் பயன்படுத்துதல்அணியில் ஒருவர் குறைகிறார் என்பதால்தான், கபில் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். துணிவு40 வருடங்களுக்கு முன் பிராபோர்ன் என்ற விளையாட்டு மைதானத்தில், வீரர்களுக்கு குறைவான அளவே உணவு வழங்கப்பட்டது. அணியில் இருந்த அனைவரும் அதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. கபில் மட்டும் துணிவாக, “நான் வேகப்பந்து வீசப் போகிறேன், எனக்கு இன்னும் அதிகமாக சாப்பாடு வேண்டும்” என்றார். இதைச் சொன்னதும் பலரும் அவரைக் கேலி செய்தார்கள். ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது. அதற்கான பயிற்சியும் அப்போது இந்தியாவில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கபிலின் ஆர்வம் ஏளனத்துக்குள்ளானது. ஆனால், அவர்களுக்குத் தன் ஆட்டத்தின் மூலம் பதில் சொன்னார் கபில்.நேர்மை1978ல் ஆஸ்திரேலியாவுடனான போட்டி. ஆஸ்திரேலியா வீரர், பந்தை வேகமாக மட்டையால் விளாசினார். தூரத்தில் இருந்த கபில் பக்கம் பந்து வந்தது. நடுவர், 'பெளண்டரி' என்று அறிவித்தார். கபில் அது 'சிக்ஸர்' என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது. ஆனால் கபிலின் நேர்மையும், விளையாட்டு உணர்வும் வெற்றி பெற்றன.வேகம்வேகப்பந்து கிரிக்கெட் விளையாட்டின் முக்கியம்சம் என்பதை கபில்தேவ் உணர்ந்தார். இந்தியர்களுக்கு சுழற்பந்து வீச்சு மட்டும்தான் தெரியும் என பல நாடுகளும் கேலி பேசின. கபிலின் முதல் டெஸ்ட் போட்டியில், அவருடைய வேகத்தைப் பார்த்து பலரும் அலறினர்.லட்சியம் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் வெறித்தனமாக அடித்த பந்தை, கேட்ச் செய்ய படுவேகமாக ஓடினார் கபில். “கபில், நான் மோசமான பந்தை வீசிவிட்டேன், விட்டுவிடு” என்று மதன்லால் மைதானத்தில் கதறினார். ஆனால், கபில் நீண்ட தூரம் ஓடி, கேட்ச் செய்து, ரிச்சர்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். அந்தக் கேட்ச், இந்தியாவுக்கு கோப்பையை உறுதி செய்தது.நெருக்கடிகளை சமாளித்தல்பந்து மட்டுமே வீசாமல், சிறந்த பேட்ஸ்மேனாகவும், ஃபீல்டராகவும் அனைத்து துறையிலும் திறமையை வளர்த்துக்கொண்டதால்தான் கபில்தேவால் நெருக்கடிகளை எளிமையாகக் கையாள முடிந்தது. அதனால்தான் இந்திய அணியின் மிகச்சிறந்த தலைவராக அவர் விளங்கினார். இன்றும் போற்றப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !