உள்ளூர் செய்திகள்

கடத்தப்பட்ட சிலைகளை ஒப்படைத்தது ஆஸ்திரேலியா!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 3 புராதன சிலைகளை ஆஸ்திரேலியா அரசு, செப்டம்பர் 19ஆம் தேதி அன்று ஒப்படைத்தது. இவற்றில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரத்யங்கர தேவியின் கற்சிலையும், ஆந்திரா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கற்சிலையும், புத்தரை வழிபடுவோர் கற்சிலையும் அடக்கம். ஆஸ்திரேலியாவின் கான்பரா தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில், ஆஸ்திரேலிய கலைத் துறை அமைச்சர் மிட்ச் பைபீல்டு, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம் இந்தச் சிலைகளை முறைப்படி ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !