இலங்கையில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!
இலங்கையின் தலைநகரான கொழும்பு, பிளாஸ்டிக் குப்பைகளால் திணறுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு குப்பை மலை சரிந்து விழுந்த விபத்தில் 32 பேர் மரணமடைந்தனர். பல வீடுகளும் நொறுங்கின. இந்த விபத்திற்குப் பிறகு, மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்தது இலங்கை அரசு. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது. மீறிப் பயன்படுத்துவோர் மீது, 'ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்' என்ற அறிவிப்பை இலங்கை அதிபர் வெளியிட்டுள்ளார்.