அழகுப் பெட்டி! பரிசுப் பெட்டி!
பிரியமானவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது நமக்கு மிகவும் பிடித்தமான விஷயம். நாமே கைப்பட ஓர் அழகிய பெட்டி செய்து, அதனுள் பரிசை வைத்து அலங்கரித்துக் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சிதான். இந்த வாரம், ஓரிகாமி முறையில் பெட்டி செய்யக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:1. ஹேண்ட்மேட் பேப்பர் 2. பெவிகால்3. ரிப்பன்* 30 செ.மீ. x 30 செ.மீ. அளவுள்ள சதுர வடிவ ஹேண்ட்மேட் பேப்பரை மூலை விட்டங்களில் மடித்து விரித்துவிடுங்கள்* அடுத்து நான்காக மடித்து விரித்துவிட வேண்டும்.* சதுரத்தின் நான்கு முனைகளும், மையத்தில் சந்திக்குமாறு முக்கோண வடிவில் உள்நோக்கி மடித்து விடவும்.* சதுரத்தின் நான்கு பக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மையப்புள்ளிவரை மடித்து விரித்து விடவும். * அடுத்து படங்களில் உள்ளதுபோல் மடிக்கவும். * படத்தில் கோடிட்டுக் காட்டிய இடங்களில், அளவுகோல் வைத்து மடித்து விரித்துவிடுங்கள். இரு முனைகளிலும் தலா 5 மடிப்புகள் வரும்.* படங்களில் இருப்பதுபோல, இருபுறமும் மடித்து ஒட்டிவிட்டால் பெட்டியின் அடிபாகம் தயார்.* இதேபோல் 29 செ.மீ x 29 செ.மீ தாளில் இன்னொரு பெட்டி செய்து கொள்ளவும்.* சிறிய பெட்டியின் மீது பெரிய பெட்டியை வைத்து மூடிவிடுங்கள். ரிப்பன் கட்டிவிட்டால் பரிசுப்பெட்டி செய்யும் வேலை முடிந்தது! - ஓவியா டீச்சர்