உள்ளூர் செய்திகள்

அழகு மீன்களை வளர்க்கத் தடை

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கண்ணாடித் தொட்டிகளில் மீன்களை காட்சிப் பொருளாக வைத்து விற்கும் செயலுக்குத் தடை விதித்துள்ளது. 158 வகை மீன்களுக்கு, இந்தத் தடை உத்தரவு செல்லும் என்றும், விலங்குகளின் மீதான வன்முறையைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணை தெரிவிக்கிறது. வண்ணத்துப் பூச்சி மீன் (butterfly fish) மற்றும் தேவதை மீன் (angel fish) போன்ற பிரபலமான அலங்கார வண்ண மீன்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். இதனால், இனி இவ்வகை மீன்களை கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கவோ, விற்கவோ முடியாது. கடந்த பத்தாண்டுகளில் இது போன்ற வண்ண மீன்களை விற்பனை செய்வது ஒரு வணிகமாக வளர்ந்துள்ள நிலையில், இத்தடை பல்லாயிரக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் என்று வியாபாரிகள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !