மொக்கை முன்னா... ஷார்ப் சாந்தி
முன்னா: சாந்தி ஒரு டவுட்டு... பஸ் கிளம்பறப்ப கண்டக்டர் 'ரைட்... ரைட்'டுனு சொல்ற மாதிரி ஃப்ளைட்லயும் சொல்லுவாங்களா?சாந்தி: அது தெரியல முன்னா. ஆனா, ஃப்ளைட்டைக் கண்டுபிடிச்சது 'ரைட் பிரதர்ஸ்'னு தெரியும்! மு : என்ன சொன்னாலும் எனக்குப் புரியுற மாதிரி விவரமாச் சொல்லு!சா : ஆர்வில் ரைட் (Orville wright), வில்பர் ரைட் (Wilbur wright) சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடிச்சாங்க. அவங்களைத்தான் ரைட் பிரதர்ஸ்னு சொல்லுவாங்க.மு : ஓ... அப்படியா! பறவைகளுக்கு அப்புறமா வானத்துல பறந்தது அவங்கதான்னு சொல்லு! சா : மனுஷங்க பறக்குறது அந்தக் காலத்துல சாதாரணம் இல்லை. விமானம் கண்டுபிடிக்குற முயற்சியில பலமுறை தோல்வியடைஞ்சு, கடைசியிலதான் கண்டுபிடிச்சிருக்காங்க.மு : பறவைகளைப் பார்த்துதான் ரைட் பிரதர்ஸ்க்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்கும் போல!சா : அப்படியும் இருக்கலாம். அவங்க பறந்த அந்த விமானத்தோட பேர், 'ஃப்ளையர்' (Flyer). மு : பொருத்தமான பேர்! இப்ப அந்த விமானத்தைப் பார்க்க முடியுமா?சா : பார்க்கலாம். ஆனா நாம ரெண்டு பேரும் 'வாஷிங்டன், டி.சி.' ல (Washington, D.C.) இருக்குற தேசிய வான்வெளி அருங்காட்சியகத்துக்குப் போகணும்.மு : அது, பஸ்ல போக முடியாத அளவுக்கு ரொம்ப தூரமாச்சே… ஃப்ளைட்ல பறந்துதான் போகணுமோ?