பயஸ் ஜோடி சாம்பியன்
தென் கொரியாவின் புசன் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பயஸ், ஆஸ்திரேலியாவின் சாம் குரோத் ஜோடி 4 - 6, 6 - 1, 10 - 7 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சான்சய், ரட்வாட்னா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம், பயஸ் 16 ஆண்டுகளுக்குப்பின் சேலஞ்சர் தொடரின் இரட்டையரில் கோப்பை வென்றார்.