உள்ளூர் செய்திகள்

உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?

பிளாட்டிபஸின் (Platypus) கால் விரல்கள் ஜவ்வு போன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன.உண்மை. இந்த அம்சத்தை வாத்துகளில் காணலாம். இந்த அமைப்பினால் இவை நல்ல நீச்சல் திறனைப் பெற்றுள்ளன. இது நீர்வாழ் உயிரினங்களை ஒத்த அம்சமாகும். இவை டாஸ்மேனியா, ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இருப்பினும், பாலூட்டிகளுக்கு இல்லாத பல உடல் தகவமைப்புகளும் கொண்டுள்ளன. இவை தான் இவற்றின் சிறப்பியல்புகளாகும். உலகில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட சில பாலூட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் பிளாட்டிபஸ்ஸை விட ஆண் பிளாட்டிபஸ் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளது. இவற்றின் பின்புறக் கால்களில் உள்ள குழிபோன்ற பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இது எந்தப் பாலூட்டிகளிலும் இல்லாத ஒன்றாகும்.இந்தக் குறிப்பிட்ட சுரப்பியில் அழுத்தத்தைக் கொடுத்துத் தங்கள் எதிரிகளின் மீது மிக வேகமாக விஷத்தைப் பீய்ச்சி அடிக்கின்றன. இதன் மூலம் இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !