பாட்டில் குடிநீர் ரூ.13 தான்
கேரளத்தில், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.13க்கு மட்டுமே விற்க வேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில், குடிநீர் பாட்டிலைச் சேர்த்துள்ள கேரள அரசு, கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு கேரள மாநில மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.